பாரசீகத்தின் மணல் சிகரங்களில் பிறந்த காவியக்கவிஞன் கலீல் ஜிப்ரான். தத்துவ தரிசனம் மிக்க கவிதைகளைப் படைத்த இந்த மாபெரும் கவிஞன் கண்ணீரும் தேனும் கலந்து எழுதிய காவியம் "முறிந்த சிறகுகள்". அதற்க்கு தமிழ் கவிதைச் சிறகுகள் தந்திருப்பவர் துறவி எனும் புனைப்பெயர் கொண்ட பத்மநாபன் எனும் கவிஞர்.
உலகம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் சிறந்த காதல், கவிதைகளில் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகளும் ஒன்று. இது இரண்டு தேன்துளிகள் கண்ணீர்த்துளிகளாக ஆன கதை, காதல் காவியத்திலும் கலீல் ஜிப்ரானின் சிந்தனை வீச்சு குறிப்பிடத்தக்கது. முறிந்த சிறகுகள் காவியத்தில் சூறாவளி எனும் அத்தியாயத்தில் அமைந்துள்ளது இப்பகுதி.