குழந்தைகளைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள்..? என்று தன் மார்பில் ஒரு
குழந்தையை அணைத்துக் கொண்டிருந்த பெண்னொருத்தி கேட்டாள் அவர் சொன்னார்
உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல அவர்கள் வாழ்க்கை தமக்கென்று
வேண்டிய குழந்தைகள் அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்
உங்களிடமி்ருந்தல்ல அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச்
சொந்தமானவர்கள் அல்ல உங்கள் அன்பை அவர்களுக்கு நீங்கள் தரலாம் உங்கள்
எண்ணங்களையல்ல அவர்களுக்கென்று தனிச்சிந்தனைகள் உண்டு