இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் ஜேம்ஸ் ஆலன். அவர் மனம் போல வாழ்வு என்ற அற்புதத் நூலை எழுதியுள்ளார். இந்தியாவின் மீது ஆலன் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். அவருடைய ஒவ்வொரு போதனையிலும் இந்தியநாட்டின் ஆன்மிகத் தத்துவங்களும் அறநெறிகளும் கலந்தே பிரகாசித்தன. ஆலன் வெளியிட்டுள்ள கருத்துகள் இன்றளவும் உலக மக்களால் மதிக்கப்படுகின்றன.