பாமர மக்கள், முன்னோரிடம் இருந்து மரபு வழியாக அறிந்த கதைகளின் தொகுப்பு நுால். கன்னட மொழி பேசும் கூலித் தொழிலாளர்கள் வாய் மொழியாக சொன்னவற்றை திரட்டி எளிய நடையில் தொகுக்கப்பட்டு உள்ளது. தொகுப்பில் 25 கதைகள் இடம் பெற்று உள்ளன. ஒவ்வொரு கதையிலும் பாரம்பரியத்தின் சிறப்பு மிளிர்கிறது. எளிய மக்களின் அன்றாட வாழ்வுடன் இணைந்துள்ளது. பல இதிகாச கதைகளை நினைவூட்டும் வகையில் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் புதிய கதாபாத்திரங்கள் காணப்படுகின்றன. அன்றாடம் கடைப்பிடிக்க தகுந்த அறங்கள் உடையதாக உள்ளன. கன்னட மொழி தொழிலாளர்களிடம் வாய்மொழியாக கேட்டு சேகரித்த செய்திகள் சுவாரசியமாக பதிவாகியுள்ளன. சுவை குன்றாத நாட்டுப்புற கதைகளின் தொகுப்பு நுால்.