அண்மையில் நான் திருமலைக்குச் சென்றிருந்தபோது ஸ்ரீவேங்கடேச ஸூப்ரபாத்ததைக்கேடுக்ம் வாய்ப்பினைப் பெற்றேன். இப்போதெல்லாம் அங்கே ஒலிபெருக்கி வைத்து மலை முழுக்கவும் ஸூப்ரபாதம் எதிரொலிக்கும் படி விட்டிருக்கிறார்கள்.இதைத் தமிழிலேயே ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று. கண்ணபிரான் அருளால் கடமையை முடித்துவிட்டேன்.ஸூப்ரபாத்த்தைச் சந்த விருத்தத்திலும், ஸ்தோத்ரத்தையும் ப்ரபத்தியையும் அகவலிலும் எழுதியுள்ளேன். ஆண்டாள் திருப்பாவைக்கு அதிக உரைகள் வந்ததில்லை.இதுவும் ஆசையில் விளைந்த ஒன்றே.