நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராக இருப்பது தொழில்துறை. தொழில் முனைவோர் பெருகினால்தான் வேலையில்லாத திண்டாட்டம் ஒழியும். நாட்டுக்குப் பயன் தரக்கூடிய பொருளை உற்பத்தி செய்வது தொழில் முனைவு ஆகும். தொழில்துறையின் மூலமாக தேசிய வருவாயைப் பெருக்க முடியும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும்.
தொழிலாளர் திறன் பெருக அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். விபத்துக்கள் மூலம் வீண் செலவு ஏற்படாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். எந்த வயதிலும் எப்பேர்ப்பட்ட சாதனையும் செய்யலாம்.
மேற்கண்ட தகவல்களும் மேலும் பல வழிகாட்டுதல்களும் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் என்ற இந்நூலில் விரவிக்கிடக்கின்றன. இந்நூலை திருமிகு. ஆர். நாயாரயணன் அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலைப் படிப்பவர்கள் நிச்சயமாக தொழிலபர்கள் ஆகும் திறமை பெறுவார்கள் என்பது உறுதி.