இது என் முதல் முயற்சி. தொழில் முனைவோருக்கான பயனுள்ள புத்தகங்கள் சந்தையில் ஏராளம்தான். இருந்தாலும் உங்களோடு சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். சிறுதொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் குறிக்கோளுடன், முனைப்போடு செயல்பட்டு கடின உழைப்ால் கொடி, கோட்டை என்று வெற்றி கண்டவர்கள் அதன் ரகசியங்களைப் புத்தகம், போட்டியென பல ஊடகங்களின் மூலமாக மக்களுக்குச் சொல்கிறார்கள். இவை பாடங்கள். இந்தப் புத்தகத்தில் இவர்கள் பார்வையும் உண்டு. ஆனால் ஆர்வச் சுரப்பிகளின் அதீத இயக்கத்தினால் அடிப்படை இலக்கணங்களைப் புரிந்து கொள்ளாமல், சகட்டு மேனிக்குச் சமர்புரிந்து. சகலமும் இழந்து நிராயுதபாணியானவர்கள் தரும் வியாபாரக் குறிப்புகள், வேதங்கள். களைத்த மனமும், இளைத்த லாபமும் கொண்டவர்களை அணுகி, அவர்கள் செய்த தவறுகளைக் கண்டறிந்து அவைகளைத் தவிர்ப்பதற்குண்டான வழி முறைகளும் இங்கே தரப்பட்டிருக்கின்றன.
இப்படிக்கு பி.சீனிவாசன்.