தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின் மூலம் நிறுவியவரான நா.வானமாமலையும் பொதுவுடைமையாளரே. இதனால் நாட்டுப்புறவியல் துறை 20-ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து தமிழில் ஒரு முக்கியமான புலமைத் துறையாக உருப்பெற்றது. தொடக்கத்தில் நாட்டுப்புற ஆய்வு செய்ய முனைந்தவ்கள் சிலர் பின்னாளில் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைஞராகவும் மாறினர். அவர்களில் ஒருவர் தமிழகம் நன் கறிந்த நிகழ்த்துக் கலைஞர் கரு. அழ. குணசேகரன்.