சந்திக்கும் நேரங்களில்
என்று நீ என்னிடம்
பேசினாய்?
என் கண்கள் உன்னைப்
பார்த்தன.
ஆனால், உன்...
உருவத்தையும் சொல்லையும்,
செயல்களையும்
கடந்த மோனநிலை
என் நிலை
உன் உணர்வுகளை மட்டுமே
உணர்ந்த நிலை
நீயே
என் தவம்... தவம்... தவம்...
இது பெண்ணின் மனநிலை மட்டுமல்ல பெண்ணின் உள்நிலைக் கூறும் கவிதை நூல் என்றுதான் கூறவேண்டும். இவருடைய கவிதை நூல்கள் அனைத்தும் காதல், சமுதாயம் என்று போனாலும் கூட இவரை ஒரு 'காதல் வண்ணன்' என்றே கூற வேண்டும்.
காதலை கவிதையில் வடிப்பதில்தான் இக்கவிஞன் வெற்றி பெறுகிறார் . காதல் இல்லாத வாழ்க்கை கல்லறைக்குள் புகுந்த நிலைதானே. வெல்லட்டும் இவரது காதல் கவிதை உலகம்.