தாமரை சிறுகதைகள் என்ற பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூலிலுள்ள கதைகளில் பல உயிருள்ளவை. ஒளி மிக்கவை. வீரியமானவை. இலக்கண விளக்கத்துக்காகப் பெரும் புலவர்கள் பாடிவைப்பார்களே செய்யுள்கள் - அவைபோல் அதிநவீனத்துவ இலக்கண வரைமுறை விளக்கங்களுக்காக வலிந்து செய்யப்பட்டவை அல்ல. தாங்கள் தங்கள் போக்கில், வாழ்வியல் உந்துதல்களிலிருந்து இயல்பாக மொட்டுக்கட்டி மலர்ந்தவை. அந்த அளவில் இவை சாதாரண மனிதர்களைப் போல எளிமையானவை. வெளிப்படையானவை. நேரடியானவை.
- பொன்னீலன்
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.