தாமரைச் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப் பெறவில்லை. சிறு முயற்சிகள் நடந்துள்ளன. இப்பொழுது இதற்கான பணிகள் தொடங்கப்பெற்றுள்ளன. இது மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. இந்தப் பணியைத் திருவையாற்று அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தொடங்கியுள்ளார். இவர் மாவீரன் வாட்டாக்குடி இரணியன், சாம்பவான் ஓடைச் சிவராமன், பாரதி நமது நிதி, கண்ணத்தங்குடி வரலாறு போன்ற நூல்களை எழுதி இலக்கிய உலகிற்குப் பெரும்பங்ககு ஆற்றுகின்றார். இச்சிறுகதைத் தொகுப்புடன் இன்னும் இவருடைய இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் இரண்டு புதினங்களும் நீயூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியட்ப் பெறுகின்றன.
- திரு. சி. மகேந்திரன்
ஆசிரியர்: தாமரை