மனிதன் அருந்தும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது? அதனால் ஏற்படும் நோய்கள் என்ன? அவை வாராதிருக்கக் கையாள வேண்டிய முறைகள் போன்ற பலவகையான முக்கியமான விபரங்களை ' தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும்' என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து பின்பற்றினால் தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும் என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து பின்பற்றினால் தண்ணீரினால் பரவும் நோய்களிலிருந்து விடுபட்டு மிக ஆரோக்கியமான வாழ்வு வாழலாம். '' நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்பதற்கேற்ப நடத்திக் காட்டலாம். நாம் நமது நாட்டின் சுகாதாரத்தின் தரத்தையும் உயர்த்தலாம். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையின் சுகாதார முன்னேற்றம், அவர்கள் கடைப்பிடிக்கும் சுகாதார கேந்திரத்தின் தீவிர நடவடிக்கைகள், கிடைக்கும் சுத்தமான தண்ணீரின் தன்மைகள், சுகாதார விளக்கக் கூடங்கள் முதலியனவற்றை பொருத்து மதிப்பிடப்படுகிறது. எனவே பொது மக்கள் பழைய மூடப்பழக்கங்களை விட்டொழித்து, சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி தண்ணீரை உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.