இலக்கிய வகைகளுள் மிகப் பெரிய பரப்புடையது காப்பியம் ஆகும். கதை நீளம், பாத்திரப்பன்மை, புனைவுச்சூழல் இவற்றால் காப்பியத்துக்குத் தனிநெறிகள் பலவாகின்றன; எனினும் இலக்கியம் என்ற பொருண்மையில் வகைவடிவு எதுவாயினும் பொதுவுத்திகளும் உள. ஆதலின் பொதுவுத்திகள் சிறப்புத்திகள் என்ற இரு பாங்கினையும் ஒவ்வோர் இலக்கியத்தும் பகுத்தறிந்து காண்பது திறனியின் கடனாகும்.