
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர்
என்பது தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனவரும் திருவாசகச் செழுமறையால்
இனிதுபுலனாம். சிவபெருமானை வழிபட்டு அம் முதல்வனது
திருவருட்டுணை கொண்டு உலகுயிர்கள் இயங்குந் திறத்தினைத் தமது வாழ்வியல்
நுகர்ச்சியிற் கண்டு தெளிந்த தமிழ் மக்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக்
கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கை இடைக்காலத்திற் சைவசித்தாந்தம் என்ற பெயரால்
வழங்கப் பெறுவதாயிற்று.