தென்னகத்தின் பண்பாட்டுப் பதிவினைப் பறைசாற்றுவதில் தில்லைக் கோயிலுக்குப் பெரும்பங்கு உண்டு. திருக்கோயிலின் வரலாற்றுப் பதிவுகள், தலபுராணத் தகவல்கள், நாள்வழிபாடு, ஆலயத்தின்கண் வளர்ந்த கலைகள், வழிபடுவதில் ஏற்பட்ட உரிமைச் சண்டைகள் முதலியவை இந்நூலின் உள்ளீடாக இழையோடுகின்றன. தமிழறிஞர், பேராசிரியர். திரு. க.வெள்ளைவாரணனாரால் எழுதப்பட்ட இந்நூல் தில்லைப்பெருங்கோயில் பற்றிய முழுமையான புரிதலையும், நுட்பமான தகவல்களையும் வழங்குகிறது.