ஆண்களின் பதின்பருவ, Coming of Age வகைக் கதைகளின் தொகுப்பு இது. பெண்களுக்கு இயற்கையாக அமைந்த உடலியல் சார்ந்த பருவம் எய்தும் அறிவிப்பு ஆண்களுக்கு இல்லை. ஆனால் அதே அளவு உடல்,உளவியல் சிக்கல்களினால் ஏற்படும் தவிப்புகள்,ததும்பல்களை அதைப்பற்றிய உரையாடல்கள் இல்லாமலே ஆண்கள் கடந்துவிடுகிறார்கள். இலக்கியங்களில் சினிமாக்களில் போற்றப்படும் அம்மா,தாய்மை ஆகியவற்றிக்கு ஈடாக அப்பா குறித்து இங்கு அதிகம் பேசப்படுவதில்லை. போலவேதான் இந்த ஆண்களின் பருவம் எய்தும் பதின்மங்களும் அதிகம் பேசப்படுவதில்லை. அவ்வகையில் ஒரு சிறு கீற்று இத்தொகுப்பு என்றாகலாம்.