தொன்மை சார்ந்த கலைகுறித்து, இன்றைய நிலைக்குடிச் சமூகத்திற்கு சரியான புரிதல் இல்லாமையால், அது அழகியல் தன்மை இல்லாதது, தொழில்நுட்பத்தில் தாழ்ந்தது, கையாள்வதற்குக் கரடுமுரடானது என்றெல்லாம் தவறாகவே எழுதப்படுகின்றது. ஆனால் உண்மையிலேயே பொருத்தமான இயற்கை நிறமிகளைக் கொண்டும், ஆர்வமூட்டும் ஓவியங்களைக் கொண்டும் திகழ்வது, நீலகிரியில் உள்ள ஆலு குறுமர் பழங்குடியினரின் ஓவியக் கலைகள்தான். அவர்களின் வாழ்வைப் புரட்டிப் பார்த்தால் 'புதைந்து எழுகின்ற புதுஉலகம்' என்று கூறலாம்.