
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான நலச்சங்கத்தின் மாநில இளைஞரணித் தலைவராக 1974-லிருந்து 1979 வரை இருந்து எல்லோருக்குமாகத்தான் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால், சென்னையில் இருந்த சில தலைவர்கள் செய்துகொண்டிருந்த உள் அரசியலால்தான் நான் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்பட்டேன். அதன் பின்னர்தான் பட்டியல் இனத்துக்குள்ளாகவே இப்படியெல்லாம் தனித்தனி பிரிவினர்களாக ஒருவரையொருவர் பாரபட்சமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயமே எனக்குத் தெரியவந்தது.
அதன் பின்னர்தான் நான், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான தலைவராகப் பாடுபட ஆரம்பித்தேன். அதேசமயம் பட்டியல் இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நான் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும்கூட அந்த மக்கள் என்னோடு நட்பாகப் பழகுகிறார்களே தவிர, இணக்கமாக இருப்பதற்குத் தயங்குகிறார்கள். அதற்குக் காரணம் எங்களுக்குள் மனதளவில் பிரிவினையை உண்டாக்கிவிட்ட தலைவர்கள்தான்.''