ஒரு மொழியில் காணப்படும் அகராதிகள் அந்த மொழியின் வாழ்க்கையையும் வரலாற்றையும் வளர்ச்சியையும் காட்டும் ஒரு கண்ணாடி என்றால் அது மிகையாகாது. ஓர் அகராதியில் காணப்படும் சொற்களின் எண்ணிக்கையை வைத்து அதே மொழி எத்துணை அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு விடலாம். அது போன்று அகராதியில் காணப்படும் குறிப்பிட்ட துறைச் சொற்களின் எண்ணிக்கையை வைத்து எந்தெந்தத் துறைகளில் அம்மொழி வளர்ந்துள்ளது என்பதையும் ஓரளவுக்குக் கூறிவிடலாம். இந்த நிலையில் ஒரு மொழியின் வாழ்வில் வளத்தில் அகராதியின் பிரதிபலிப்பும் அதன் பங்கும் நன்கு அமையும்.