யா ஒ (மறைக்கப்பட்ட மார்க்கம்) வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. திரும்பச் செய்தலை அறவே வெறுக்கும் எனக்கு இந்த வடிவத்தைவிட மனதில்லை. விளைவு; இன்னும் அடர்த்தியாய், செறிவாய்... என்றார் யாஒ' சங்க இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்ற நீண்ட மரபிலும்; நவீன எழுத்தில் கதை, கவிதை, நாவல், கடித, பயண இலக்கியங்கள் என்ற பரப்பிலும் இல்லாத ஒரு புதுவகை இலக்கிய வகைமையை முன்வைக்கும் யோசனையில் உதித்ததுதான் இந்த மறைபுனைவு என்கிற வகைப்பாட்டினம், சிறு குழந்தைகள் முதல் தத்துவ, நாட்டாரியல் ஆர்வமுள்ளவர்வரை யா-ஒ விடம் உரையாட வெளிகளுண்டு.