காளி தேவியின் தோற்றத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க எடுத்த முயற்சியின் இரண்டாவது பரிணாமம்தான் 'புகழ்மிக்க காளித் திருகோயில்கள்'. காளி தரிசனத்தில் காளியை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவள் அருள் புரியும் ஆலயங்களை இந்நூலில் அறிமுகப்படுத்தி வைக்கிறோம். ஆரம்ப காலங்களில் வெட்ட வெளியேயே ஆலயமாகக் கொண்டு அருள்புரிந்து இந்தக் காளி எல்லை தெய்வாக ஆக்கப்பட்டபின் ஊர் எல்லையிலேயே ஆலயங்கள் அமைத்து வழிபடும் தெய்வமாகவும் ஆனாள்.