காலையில் ஸ்நானம், ஸந்த்யாவந்தனம், மாத்யான்னிகம், திருவாராதனம் இவைகளை முடித்த பிறகு கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு இரண்டு தடவை ஆசமனம் செய்து 3 தர்ப்பங்களை செய்த பவித்ரத்தை மோதிர விரலில் தரித்து, அத்துடன் தர்ப்பங்களை இடுக்கிக் கொண்டு, சில தர்ப்பங்களை ஆஸனமாகம் போட்டுக் கொண்டு கிழக்கு முகமாக உட்கார்ந்து ப்ராணாயாமம் செய்யவும்.