வாழ்வில் குறைகள் நீங்கி நிறைவும், ஆனந்தமும் ஏற்பட வேண்டி மக்கள் அனைவரும் இறைவழிபாடு செய்வதை அன்றிலிருந்து இன்றுவரை காண முடிகிறது1 குறை இருப்பதால் தான் இறையைத் தேடுகிறார்களோ?
தமக்கு நேர்ந்த குறையை இறைவனிடம் அறிவிக்கும் (Express) ஒரு மறைதான் வேண்டுகோள் எனப்படுகிறது!
இந்த வேண்டுகோளை இறைவனிடம் ஆலயங்களில், இல்லங்களில் தானே வேண்டிக் கொள்வது ஒரு வகை. ஆலயங்களில் அரச்சகர் மூலம் வேண்டிக் கொள்வது மற்றொருவகை! இதில் பக்தருக்காக அர்ச்சகர் வேண்டிக் கொள்கிறார்!! இந்த வகையில் யாகங்கள் செய்து யோகங்கள் பெறுவதும் ஒருவகையான இறைவழிபாடாகும்!!!
இதைப்பற்றி எளிமையாக, தெளிவாக, ரத்தின சுருக்கமாக இந்நூலில் காண்போம்.