இத்தகைய புத்தகம் ஒரு தனி மனிதனின் தனிப்பட்ட முயற்சியில் எழுதுவது சாத்தியமல்ல. பல வருடங்களாக வியாபார செய்தித்தாள்களிலும் வாராந்திர பத்திரிகைகளிலும், பல புத்தகங்களிலும் இருந்து சேகரிப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பல நிபுணர்களின் அனுபவமும், அறிவாற்றலும் இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் மறைந்திருக்கின்றன.