திருக்கோயில்கள் வழிபாட்டுத்தலங்கள் என்ற நிலைக்கும் மேலாக நம் முன்னோர்களின் வாழ்க்கை முறை, ஆட்சியாளர்களின் நிர்வாகம், அரசின் திட்டங்கள், கல்வி, கலை, கலாச்சாரம் என அனைத்து பிரிவுகளையும் அறிய உதவும் ஆவணங்களாக அமைந்துள்ளன.
இக்கோயில்கள் பத்தியை மட்டும் வளர்க்கவில்லை. இதில் அமைந்துள்ள சில அமைப்புகளும் அதிசயங்களாக அமைந்துள்ளன. அவை இன்றும் நமக்கு வியப்பை தருவதாக உள்ளன
நம் முன்னோர்கள் அறிவியல், பொறியியல், வானவியல் என அனைத்திலும் நிபுணர்களாக திகழ்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இவை உதவும் என நம்புகிறோம்.
அவற்றை நினைவுபடுத்திக் கொண்டு நம் பெருமைகளை பறை சாற்றுவது இக்கட்டுரையின் நோக்கம்.