கைகுலுக்கலாமா? பகலில் தூங்கலாமா? உணவில் பல்லி விழுந்தால் என்ன
ஆகும்? பள்ளி மாணவர்களின், இது போன்ற கேள்விகளுக்கு டாக்டர் ரவிக்குமார்
அளித்துள்ள அசத்தலான விளக்கங்கள் நகைச்சுவை உணர்வோடு இந்நூலில்
பதிவாகியுள்ளன.
இக்குறிப்புகள் டாக்டர் விகடன், குமுதம் ஹெல்த்,
கோகுலம், மங்கையர் மலர் ஆகிய பிரபல இதழ்களில் பிரசுரமானவை. நோய்த்
தவிர்த்து நல்வாழ்வு வாழ நல்லதொரு வழிகாட்டியான இந்நூல் எளிதில் விளங்கும்
மக்கள் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘கை கழுவுதல்’ பற்றிய டாக்டரின்
விளக்கம் ஒன்றே போதுமானது இந்த நூலின் அவசியத்தை உணர!