தமிழர்களின் சமயம் பொதுவாக இந்து சமயம் மற்றும் பிற தர்ம சமயங்களுடன் ஒத்துப்போகின்றன. தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சைவம், வைணவம், பௌத்தம், சமணம், ஆசீவகம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள்.