கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் தமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிப்பும் என்னும் இந்தத் தலைப்பில் வெளிவரும் இந்நூலில் இரண்டு பகுதிகள் அடங்கியுள்ளன. 1984 ஆம் ஆண்டு லண்டன் பி.பி.சியின் தமிழோசையில் அவர் ஆற்றிய நான்கு உரைகள் ஒரு பகுதியில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சங்க காலம் தொடங்கி இக்காலம் வரையில் தமிழும் வரலாறும் பண்பாடும் அடைந்த மாறுதல்கள், வளர்ச்சிப் போக்குகளை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)