ஷாலின் என்கிற வடசென்னைக்காரியின் 36 வயதின் அனுபவ தொகுப்புதான் இந்த நூல். ஆனால் கடந்த பல நூற்றாண்டு காலமாக வடசென்னையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலையின் பந்தத்தை உள்வாங்கி எழுதியிருக்கிறார். இப்போது இல்லாத வடசென்னையும், இப்போது இருக்கின்ற வடசென்னையும், இருக்கப்போகிற வடசென்னையும் இந்த நூலில் தென்படுகிறது.