சுந்தரி ஆர்ப்பாட்டமான அடிக்கும் அழகு. இனிப்புக் கடைகளில் அடுக்கியிருக்கும் பாம்பே ஸ்வீட்ஸ் பலவண்ணங்களில் பார்த்தவுடனே மனதைப் பறிக்குமே அதைப் போல் பார்த்தவுடனே மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகு. அமிர்தவல்லியோ நின்று நிதானமாக எறியும் அகல் விளக்கைப் போன்றவள். கண்ணை உறுத்தாதவள். சிலரைப் பார்த்தவுடன் பிடிக்கும் சுந்தரவல்லியைப் போல். சிலரைப் பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் அமிர்தவல்லியைப் போல். பெண்களுக்குள் இப்படிப்பட்ட குணங்கள் இருப்பது இயற்கைதானே. இதனை அறிய "அத்தை மகனே என் அத்தானே!" நாவலை வாங்கிப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.