சுமந்தன் ஒரு பட்டதாரி, வயது ஒரு 35 இருக்கும் . தனது தொழிலுக்கு தேவையான அனைத்துமே அவன் கற்றறிந்தவன் . நல்ல பண்பாளன் . தனது தொழிலில் பயபக்தியோடு இருப்பவன் . குறைந்த லாபத்தில் மக்களுக்கு நிறைவான தரத்தை தரவேண்டும் என்று விரும்பியவன். வங்கியில் கடன் வாங்கி தனது சொந்த ஊரில் ஒரு சிறு தொழிலை ஆரம்பித்து மற்றவர்கள் முன்னிலையில் நல்லபடியாக வரவேண்டும் என்று நம்பிக்கையோடு போராடி வருபவன்.ஆனால் கடந்த ஒர் வருடங்களாக அவனுடைய தொழில் சறுக்கியத். ஏன் என்று புரிவதற்கு முனபே அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் . அது மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும் ஒரு சிறிய பெட்டிக்கடையாக இருந்தாலும் அதற்கான கொள்கை மற்றும் கோட்பாடுகள் ஒன்றுதான். ஒரு தொழிலின் வெற்றிக்கு முதல் கோட்பாடு வாடிக்கையாளர்களின் தேவையும் எதிர்ப்பார்ப்புகளையும் அறிந்து கொள்வது.