எல்லா தேசங்களையும் பொறுத்தவரையிலும் இதுதான் உண்மை. உதாரணமாக, இந்தியா போன்ற ஒரு தேசத்திற்கு எதிர்காலம் பற்றிய நினைப்பே இல்லை. அதாவது அதற்கு கிழடு தட்டிவிட்டது. அந்த நாடு எப்போதுமே இறந்த காலத்தைப் பற்றியே சிந்திப்பது அதன் அறிகுறிதான். நூற்றாண்டுகளாக ராமர்-சீதையின் வாழ்க்கையை நடித்துக் கொண்டிருப்பதே அதன் வழக்கமாகி விட்டது. எல்லாக் கிராமங்களும் இதன் நாடகத்தை நடத்துகின்றன.
புத்தர், மகாவீரர், ஆதிநாதர், ரிக்வேதம், உபநிஷதங்கள் என்றே இந்தியா எண்ணிக் கொண்டிருக்கிறது. எல்லாமே முடிந்த கதை. இப்போது அந்த தேசம் சாவுக்காகக் காத்திருக்கிறது. அதற்கு எதிர்காலம் இல்லை.