மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், குடிமுறைப் பணியாளர்கள், தொழில்முறை
மருத்துவப் பணியாளர்கள் போன்றவர்களுக்கான சிறப்பு உறுதிமொழிகளை
உருவாக்கியிருக்கின்றேன். எல்லா மனிதர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம்
என்பதை நிச்சயப்படுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன. பெற்றாரே இந்த
புத்தகத்தைப் படித்து, அந்தச் செய்திகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு
எடுத்துரைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறேன். ஆசிரியர்கள் இந்தப்
புத்தகத்தைப் படித்துவிட்டுத் தங்கள் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன். அரசியல் தலைவர்கள் இதைப் படித்துவிட்டுப்
பாராளுமன்றத்திலும், இந்திய மக்கள் மத்தியிலும் எடுத்துக் கூறவேண்டும்
என்று வேண்டிக் கொள்கிறேன்.