ஜனாதிபதியிடம் பா.ஜ., மூத்த தலைவர்கள்
மனு: லோக்பால் விவகாரத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, பார்லிமென்டில் நாடகம்
நடத்தி, ஜனநாயகத்தைப் படுகொலை செய்துவிட்டது. இவ்விஷயத்தில், ஜனாதிபதி
உடனடியாக தலையிட வேண்டும்.டவுட்
தனபாலு: ஜனாதிபதி என்னமோ, பாய்ஞ்சு போய் மத்திய அரசு மேலயும், காங்கிரஸ்
மேலயும் நடவடிக்கை எடுக்கப்போற மாதிரி தான்... எதுவும் நடக்காதுன்னு
தெரிஞ்சும், மனு கொடுக்கப்போன நீங்க தான் ஜனநாயகப் படுகொலை பண்ணிட்டு
இருக்கீங்கன்னு நினைக்கிறேன்...!
இந்தியாவின்
முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண் பேடி: அன்னா ஹசாரே முழு ஓய்வில்
இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, எதிர்வரும்
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார்.டவுட்
தனபாலு: அருமையான முடிவு... ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்ல காங்.,
கூட்டணி தோல்வியடைந்தால், "எங்களால தான் தோற்றது'ன்னு சொல்லிக்கலாம்...
ஒருவேளை ஜெயிச்சுட்டா, "அன்னா பிரசாரம் பண்ணாததால தான்
ஜெயிச்சுட்டாங்க'ன்னும் சொல்லிக்கலாம்...!