இத்தனை உயிர்களைப் படைத்து பரிணமிக்கச் செய்துள்ள இயற்கை, மனிதனுக்கும் இப்பூமியில் வாழும் உரிமையைக் கொடுத்துள்ளது. ஆனால், மனிதனோ தான் மட்டுமே இப்பூமியில் வாழ பிறந்திருப்பதாக எண்ணிக்கொண்டதன் விளைவு, இன்று நம் பூமி பெரும் அபாயத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நாம் மட்டுமல்ல... பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம். மண்ணின் துயர் போக்கலாம்.இரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் இடப்படும் நிலங்களில் மண்புழுக்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை! மண்புழு உழவனின் நண்பன் எனத் தெரிந்திருந்தும், இரசாயன நஞ்சுகளை நிலங்களில் விதைத்து நண்பர்களையே கொல்லும் அறிவீனத்தைச் செய்தோம்.