இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எண்ணெய் வித்துக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பாரம்பரியமான எண்ணெய் வித்துக்கள் தவிர இந்தியாவை வந்தடைந்த சூரிய காந்தி, சோயா ஆகிய வித்துகளும் நமது எண்ணெய் வித்துப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளன. இந்த விஷயத்தில் 1986- இல் வடிவமைக்கப்பட்ட '' Technology Mission on Oil seeds" அதாவது எண்ணெய் வித்துக்களின் தொழில் நுட்பக்குழி இந்தியப் பிரதமரின் நேரிடையான கண்காணிப்பின் கீழ் இயங்கி இன்று எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெறக் காரணமானதை நாம் அறிவோம்.