
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசனைப் பற்றி தேசிய ஒருமைப்பாட்டை
வலியுறுத்திய தமிழ் உணர்வாளரான ம.பொ.சி. எழுதிய நூல். பாரதியாரையும்,
பாரதிதாசனையும் தனக்குள்ள தமிழ்ப் பற்றின் காரணமாக சமநிலையில் வைத்தே
காண்பதாக நூலின் முன்னுரையில் ஆசிரியர் கூறுகிறார். பாரதிதாசன் ஆரம்ப
காலத்தில் காந்தியவாதியாக இருந்து தேசப் பக்திப் பாடல்களைப் பாடியது,
பாரதியாரின் பக்தராக அவர் விளங்கியது, அவருடைய ஆங்கில ஆதிக்க எதிர்ப்புக்
குணம் என பாரதிதாசனின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கும் நூல்.
ம.பொ.சி.யையும்,
பாரதிதாசனையும் புரிந்து கொள்வதற்கும், "அவர்கள் இருவரும் வெவ்வேறு
அரசியல் பார்வையைக் கொண்டவர்களாக இருந்தபோதிலும் தமிழ்ப் பற்று என்ற
புள்ளியில் அவர்கள் இருவரும் ஒன்றுபடுகிறார்கள்' என்று கூறும்
பெ.சு.மணியின் ஆய்வுரை நூலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.