90களுக்குப் பிந்தைய இந்தியாவை மதவெறி அரசியலின் காலம் என்றே சொல்லலாம். இந்துத்துவ அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிய காலத்திலிருந்து அ.மார்க்ஸ் அதன் பல்வேறு பரிமாணங்களை மிகக் கூர்மையாக அவதானித்துப் பதிவுசெய்து வந்திருக்கிறார். ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் த்துவார்த்த அரசியல் பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.