”பல சமய்ங்களில் ஒரு கதாபாத்திரம் பற்றிய ஓரிரு சொற்களிலான விவரணையில் அல்லது அந்த கதாபாத்திரம் பேசும் ஓரிரு வார்த்தைகளில் அவை முழுமை பெற்று நம் மனதில் வந்துவிடுகின்றன. அதே போல ஒரு சூழல் குறித்த சித்திரத்தை உருவாக்குவதில் ஒரு கவிதையின் சிக்கனமும் ஒரு புகைப்படக்காரனின் துல்லியமும் ஒரு வேட்டைககாரனின் கவனம் மிகுந்த துடிப்பும் சுஜாதாவின் இந்தக் கதைகளில் ஒன்றிணைந்துவிடுகின்றன. 6961 என்ற குறு நாவலில் விவரிக்கப் படும் ஒரு கல்யாணக் காட்சி இது: