தன்னையே தான் தேடி; நான் யார்? நான் என்பது என்ன? எங்கிருந்து வந்தேன்? ஏங்கே செல்கிறேன்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடியவர்கள் பலர். பதில் தெரிந்தவர்கள் எத்தனை பேர்? இந்த தேடல் ஆண்களுக்கு வந்தால். அவர் தம் மனைவி, மக்கள், இல்லத்தை விட்டு போனாலும் யாரும் அது பற்றி தவறாக பேசுவதில்லை. அதே ஒரு பெண்ணிற்கு அந்த தேடல் ஏற்பட்டால். அவள் வீட்டை விட்டு போனால். உலகம் அதை எப்படி எடுத்துக்கொள்ளும்? ஆனானப்பட்ட மீரா,கிரிதரனை தன் உயிராக நினைத்தபோது அவளையே 'குலநாசினி' என்று பழிக்கவில்லையா? இந்த காலத்தில் ஒரு பெண் அப்படி போகனினைத்தபோது. அவள் படும் பாட்டை விவரிக்கும் கதை இது. அகிலாவை பாட்டி தாத்தா வளர்த்த விதம் தான் இதற்கு காரணமா? கதையை படியுங்கள், தெரியும்.