ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கிறது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிறது என்று சுட்டிக்காட்டுவது இதன் சிறப்பு.