இப்புத்தகத்தின் தலைப்புக் கதையான கோபுரம் தாங்கியை ஆனந்தவிகடனில் வாசித்தபொது இதை உங்களுடைய கமர்ஷியல் வரிசையில் சேர்த்து விடாதீர்கள் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் ஏற்க இயலவில்லை. வெளிவர இருக்கும் என்னுடைய இன்னொரு சிறுகதைத் தொகுப்பான ''ஏகாந்தி'' யை ஒருவேளை நீங்கள் வாங்கி வாசிக்க நேர்ந்தால் ஏன் என்னால் கோபுரம் தாங்கியை அதில் சேர்க்க இயலாமல் போயிற்று என்பது உங்களுக்கு விளங்கும். அப்படி ஒருவேளை நடந்திருந்தால் நீங்கள் கையில் வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தின் தலைப்பு என்னவாக இருந்திருக்கும் என்கிற தலையாய ஆராய்ச்சியை உங்கள் வசமே விட்டுவிடுகிறேன்.