ருஷ்ய நாட்டுப் பிரபல இலக்கியக் கர்த்தாக்களில் ஒருவரான துர்கநேவ் 1857 -ல் எழுதிய ஆஸ்யா' என்ற குறுநாவலின் மொழி
பெயர்ப்புத்தான் இந்தச் சீமானின் திருமணம். இந்த நாவலில் வரும் பாத்திரமான ஆஸ்யாவைத்தான் பாருங்கள். அவள் ஒரு பிரத்தியேக வார்ப்படம் அவள் அசைவுகளிலும் , நெளிவுகளிலும்தான் எத்தனை அர்த்தபாவங்கள். இந்த நாவல் எழுதப்பெற்று ஏறத்தாழ நுற்றாண்டுகள் ஆகின்றன. இப்பொழுதுதான் முதலில் தமிழில் வெளிவருகிறது. இந்த ஆங்கில நாவலைப் படித்தும் உடனே தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு ஏற்பட்டது. இதை தமிழாக்க எனக்கு உற்சாக மூட்டிய என் அன்பு நண்பர் திரு. ஆர். கே.கண்ணன் அவர்களுக்கு நான் நன்றி செலுத்தவேண்டும்.
- அன்பு நா. பாஸ்கரன்.