நிக்கோலாய் லெஸ்காவ் ரஷியாவின் ஒரெலில் 1831 செமியோன் டெமிட்ரிவிச் லெஸ்காவ் - மரியா பெட்ரோவ்னா அல்பெரியேவா தம்பதியினருக்குப் பிறந்தார். லெஸ்காவ், பத்திரிக்கைகளுக்குக் கட்டுரைகளையும் செய்திகளையும் விமர்சன அடிப்படையில் எழுதி அனுப்பினார். அவை அரசியல் மற்றும் இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து கதை மற்றும் நாவல்களை எழுதினார் . அவற்றில் 4 குறுநாவல்கள் - மனங்கவர்ந்த நாடோடி, சென்ஸ்கியின் லேடி மாக்பெத், இடதுகை மாஸ்டர், மேக்அப் கலைஞர் ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அன்றைய ரஷிய மக்களின் வாழ்க்கையை லெஸ்காவ் எவ்வளவு துல்லியமாக அறிந்திருந்தார் என்பதையும் பாத்திரங்களை அமைப்பதில் அவர் எவ்வளவு விஷய ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதையும் இந்தச் சிறுநாவர்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும், மொத்தத்தில் அன்றைய ரஷியாவுக்கே நம்மை அழைத்துச் செல்கிறார்.
- பதிப்பகத்தார்.