''உலகம் உங்கள் கைகளிலே'' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பத்து ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மொழிபெயர்ப்பில் மூலக் கதையின் சுவை குன்றாமலும் கதையோட்டத்தின் விறுவிறுப்பு கெடமாலும் இருக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சிறுகதையின் முன்னோடிகள் எனக்கருதப்படும் டால்ஸ்டாய்,செகாவ்,மாப்பசாந்,டாஸ்டாவ்ஸ்கி,சோமர்செட்மாம்,ஜேம்ஸ் தம்பர்,ஆர்.கே.நாராயணன்,மற்றும் ஆர்தர்கானன்டாயிலும் எழுதிய சிறந்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தமிழ் கூறு நல்லுலகம் இதனை வரவேற்கும் என நம்புகிறோம்.