ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையான புலமையில் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர். அப்பெருமகனார் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகமான வெனிஸ் வணிகன் (The merchant of Venice) என்ற நாடகத்தை கதை வடிவிலும் ஆய்வு வடிவிலும் அழகுத்த தமிழ் நடையில், படிப்பவர் நெகிழும் வகையில் எழுதியுள்ளார். குறைந்த அளவு ஆங்கிலப் புலமை உள்ளவர்கள்கூட எஸ்.ஆர்.கே. அவர்களின் இந்தத் தமிழாக்க நூலைப் படித்துதவிட்டு ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களைப் படித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.