ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு உலகளாவிய வரவேற்பும் பாராட்டும் என்றும் உண்டு. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் எஸ் இராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே) அவர்கள் தமிழிலும் ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகங்களில் ஒன்றான மனம்போல் மாங்கல்யம் (As you like it) ஐ கதை வடிவிலும் ஆய்வு வடிவிலும் அழகுத்தமிழ் நடையில், படிப்பவர் நெகிழும் வகையில் எழுதியுள்ளார். குறைந்த அளவு ஆங்கில புலமை உள்ளவர்கள் கூட எஸ்.ஆர்.கே. அவர்களின் இந்த தமிழாக்க நூலைப் படித்துவிட்டு ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களை படித்தால் எளிதில் புரிந்து கொள்ளலாம்.