சோசலிசத்தின் இலக்கு மனிதன்தான். ஒவ்வொரு மனிதனின் சுதந்திர வளர்ச்சியும் அனைவரின் சுதந்திர வளர்ச்சியும் அனைவரின் சுதந்திர வளர்ச்சியோடு பிணைந்துள்ளது' என்ற கம்யூனிஸ இயக்கத்தின் பிரகடனத்தை உயர்த்திப் பிடித்த மாபெரும் மார்க்ஸியப் போராளி ரோசா லுக்சம்பர்க்.
ஜெர்மானிய தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வாழ்நாள் முழுவதும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட இந்த வீராங்களை உலக கம்யூனிச இயக்கத்தின் சிற்பிகளில் முக்கியமானவர். தத்துவத்திலும், நடைமுறையிலும் தலைசிறந்து விளங்கியவர். மகத்தான ருஷ்யப் புரட்சி ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர அலையை ஏற்படுத்திய சமயத்தில் மார்க்ஸய வகைப்பட்ட சோசலிசத்தின் மிகச்சிறந்த படைப்பாளியாக, போராளியாகத் திகழ்ந்தார். எதிர்ப்புரட்சி அரசால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.