மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
பாரதியார் பாடல்களையும், பகவத் கீதையின் கருத்துக்களையும் இந்நூலாசிரியர் ஒப்பிட்டு மிகச் சுவையாக விருந்து வைக்கிறார். கீதையின் பக்தர்கள் சிலர் பாரதியாரின் தலைவர்கள் என்றும் (பக்.15) நாலு வகுப்பும் ஒன்றே என்பதை விளக்கியும் (பக். 68) `நான்' என்ற ஆணவம் தள்ளப்பட வேண்டும் என்பதையும் (பக். 101) கீதையை ஞானரதத்துடன் ஒப்பிட்டும் (பக். 145) பாரதியார் எதிர்ப்புகள், பாதிப்புகள், தடைகள் ஆகியவை கடந்து உலகமகா கவியாக விசுவரூபம் எடுப்பது குறித்தும் (பக். 160) நூலாசிரியர் விளக்குவது மிக அருமை.பாரதிக்குப் புகழ் சேர்க்கும் விதத்தில் நூலாசிரியர் நன்கு ஆய்வு செய்துள்ளார். அனைவரும் படித்துப் பயனடையலாம்.