நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல
விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது
உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய
தருணம்தான் நம் ஆத்ம/சுய தரிசனம். உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும்
பலவிதமான சமூக செயல்பாடுகளை செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு
தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு
மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக,
சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.
இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில்
நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில குறிப்புகள்
கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள்